ராம சரித கீதம் - பகுதி 3
- Uma Shankari
- Mar 20, 2024
- 1 min read
சரணம் 04 : ராகம் - முகாரி
ஸ்ரீராமசந்திரனுக்குப் பட்டம் சூட்ட திட்டமிட்டான் தசரதன்
தீராப் பகை கொள் கூனி அதைத் தடுக்க சூழ்ச்சி புரிந்தாள்
கேகயன் மகளும் போராடிக் காதல் வலை விரிக்க
புத்தி இழந்து விழுந்த கிழந்தந்தை கூராய் விஷம் தோய்ந்த
வாள்போல் இரண்டு வரம் ஒன்றால்
ஜானகியும் தம்பியும் பின் தொடர
சரணம் 05 : ராகம் - ஸஹானா
உத்தம புத்திரன் ராம பத்திரன் வனம் செல்ல
ஊரெல்லாம் கதறியழுதது வாய் கொண்ட உயிரெல்லாம் அழுதன
இளம் கன்றோடு பசுவும் பறவைகளும் பூங்காவும் அழுதன
பெற்றவளின் வயிறு பற்றி எரிந்தது
பார்த்திபன் ஆவி துடித்துப் பிரிந்தது
பார் இருள் சூழ்ந்தது
மரவுரி சடையோடு நடந்து சென்றவனை (கோசலை)
The following audios have been taken from Bhavani's music Channel on Youtube (https://www.youtube.com/@bhavanismusic5036)
The following audios are the work of Dr. Bhooma Krishnan, my teacher and a resident of Toronto, Canada



Comments