top of page

ராம சரித கீதம் - பகுதி 1




ராம சரித கீதம் என்பது பாபநாசம் சிவனால் இருபத்து நாலாயிரம் ஸ்லோகங்களை கொண்ட வால்மீகி இராமாயணத்தை சுருக்கமாக 2 4 ராகங்களில் அமைக்கப்பட்ட கீர்த்தனம் . இது சங்கீதம் ஸாஹித்யம் இரண்டும் பாலும் தேனும் போல் அமைந்துள்ளது என்று பலராலும் பாராட்டப்பட்டுள்ளது. இந்த கீதத்தில் பால காண்டத்தை நாட்டை, கரஹரப்ரியா, பந்துவராளி, சுத்த சாவேரி என நான்கு ராகங்களிலும் சிட்டாஸ்வரங்களுடன் சேர்த்து அமைக்கப்பட்டிருக்கிறது. இதே போல் அயோத்யா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா மற்றும் சுந்தர காண்டம், யுத்த காண்டம் எல்லாவற்றையும் 24 ராகங்களில் மெட்டுடன் சிட்டை ஸ்வரங்கள் சேர்த்து அமைத்ததுடன் மகுட ஸ்வரங்களை கடைசி ராகமான மத்யமாவதியிலிருந்து தொடங்கி நாட்டை ராகத்தில் அற்புதமாக முடிக்கப்பட்டு இருக்கிறது.

நாம் ராம சரித கீதத்தை இந்த பதிவிலும் பின் வரும் பதிவுகளிலும் கற்றுக் கொள்வோம்.


பல்லவி : ராகம் - நாட்டை

கோசலைப் புதல்வனைப் பணிவாய் மனமே

குவலயதள ஸ்யாமள-கோமள (கோசலை)


அனுபல்லவி : ராகம் - நாட்டை

வாசவன் அயன் முதல் வானவர் வணங்க

வந்தவதரித்த பரந்தாமனை ராமனைக்- (கோசலை)


சரணம் 01 : ராகம் - கரஹரப்ரியா

கௌசிக முனியுடன் கானகம் சென்று

கொடிய தாடகை அரக்கியைக் கொன்று

நீச சுபாஹு மாரீசரை வென்று

நெறி தரும் வேள்வி நிறைவுறச் செய்தக்- (கோசலை)


The following audios have been taken from Bhavani's music Channel on Youtube




The following audios are the work of my teacher Dr. Bhuma Krishnan, a resident of Toronto, Canada







Comments


©2022 by Tiruppugazh Nectar.

bottom of page