top of page

Teeratha ViLaiyaatu PiLLai (Part 1)

Updated: Sep 11

"கண்ணன் தீராத விளையாட்டுப் பிள்ளை" என்பது பாரதியார் எழுதிய பாட வரிகள் ஆகும். இந்த பாடலில் கண்ணனுடைய விளையாட்டுத்தனத்தையும், சேட்டைகளையும், பெண்களிடம் அவர் காட்டும் அன்பு மற்றும் குறும்புகளை பாரதியார் அருமையாக விவரிக்கிறார்.  இங்கு பாரதியார் கண்ணனை சர்வ வல்லமை படைத்த பரம பிரம்ஹம் என்று மட்டும் பார்க்கவில்லை. அவர் அன்பான பிள்ளை என்ற பாங்கில் பார்கிறார். இந்த நெருக்கம் தான் “பக்தி”யின் உச்சம். இறைவனின் லீலைகள் பக்தர்களுக்கு சோதனையாகத் தோன்றினாலும், இறுதியில் அது ஆனந்தமாக மாறும்.


இந்த பாட்டில் மாதுர்ய பாவம் (Mādhurya Bhāva) — அதாவது கண்ணன்–கோபியர் உறவிலுள்ள அன்பு / காதல் பாங்கு கொண்ட பக்தி —வெளிப்படுகிறது. மாதுர்ய பாவம் என்பது பக்தர் தன்னை நாயகியாக/தலைவியாக  எண்ணி இறைவனை நாயகனாக (தலைவனாக )  முழுமையான அன்புடன் அர்ப்பணிப்பதால்  நானும் நீயும் என்ற வேறுபாடு கரைந்து விடுகிறது. கண்ணன் அவர்கள் மனங்களில் தோன்றிய ஒவ்வொரு உணர்ச்சியையும் அனுபவித்து, அவர்களுக்கு பரம ஆனந்தம் (rasānubhava) அளிக்கிறான்.


கிருஷ்ணர் ஆண்மையின் உருவகமான பரம புருஷராக இருப்பதால், படைக்கப்பட்ட  மற்ற அனைத்தும் பெண்மையே.


ராகம்: சிந்து பைரவி

தீராத விளையாட்டுப் பிள்ளை-கண்ணன் தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. (தீராத)


தின்னப் பழங்கொண்டு தருவான் (கண்ணன்) பாதி தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான் என்னப்பன் என் நேயன் என்றால் அதனை எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். (தீராத)


Here is Dr.Ambika Kameshwar teaching the lines:




ராகம் : கமாஸ் அழகுள்ள மலர்கொண்டு வந்து என்னை அழஅழச் செய்த பின் “கண்ணை மூடிக்கொள்; குழலிலே சூட்டுவேன்” என்பான் என்னைக் குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான். (தீராத)



Comments


©2022 by Tiruppugazh Nectar.

bottom of page